ஸ்பெஷல்

அதிமுக தலைமைக்கு சசிகலா அச்சாரம்: கும்பகோணம் கோயில்களில் சுவாமி தரிசனம்!

கல்கி

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உடன்பிறவா சகோதரி என்று அழைக்கப்பட்ட  சசிகலா இன்று கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம், சாரங்கபாணி சுவாமி ஆலயம், சக்கரபாணி சுவாமி ஆலயம், உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இன்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.அதிமுக-வில் மீன்டும் இணைந்து செயல்படுவதற்கான அச்சாரமாக  இந்தவிஷயம் கருதப்படுகிறது.

இன்று காலை தஞ்சாவூரிலிருந்து சசிகலா முதலில் கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு மூலவரான ஆதிகும்பேஸ்வர சுவாமிக்கு வெட்டி வேரில் தயாரிக்கப்பட்ட மாலையை வழங்கினார்.இதனை தொடர்ந்து மங்களாம்பிகை அம்மன் சன்னதியில் வழிபாடு நடத்தினர்.

இக்கோயிலில் சுவாமி தரிசனம் முடித்தபிற்கு, அங்கிருந்த செய்தியாளர்கள் பேட்டி தரக் கேட்டனர். ஆனால் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்புக்கு மறுத்துவிட்டு அடுத்தடுத்த கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு சென்றுவிட்டார்.

அந்த வகையில் கும்பகோணத்தைச்  சுற்றியுள்ள சூரியனார் கோயில், கஞ்சனூர், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ஆலயம், அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி ஆலயம் ஆகிய கோயில்களில் இன்று சசிகலா சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை உங்களுக்கு இருக்கா? அதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய 10 பண்புகள் என்ன?

மகிழ்ச்சியை வரவழைக்கும் மந்திரம் இதுதான்!

வீட்டில் மகிழ்ச்சி பொங்க வாஸ்து சாஸ்திரம் காட்டும் ஓவியங்கள்!

நாக சைதன்யாவின் ‘தண்டேல்’ படத்தை வாங்கிய நெட் ஃப்லிக்ஸ்!

உலகிலே மிக உயரமான மரம் எது? எங்கு உள்ளது? தெரிந்துகொள்வோமா?

SCROLL FOR NEXT