ஸ்பெஷல்

சென்னை மின்சார ரயில் விபத்து: ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு!

கல்கி

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில், திடீரென முதல் நடைமேடையின் மீது ஏறி விபத்துக்குள்ளானது.இந்த  ரயிலில் பயணிகள் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ரயில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்துக்குள்ளான மின்சார ரயில் அகற்றப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் இன்று காலை முதல், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையிலிருந்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்ததாவது:

நேற்று மாலை விபத்தில் சிக்கிய ரயில் முழுமையாக மீட்கட்டப்பட்டது. இந்த விபத்தால் எந்த ஒரு ரயில் சேவையும் ரத்து செய்யப்படவில்லை. மின்சார ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில் ஓட்டுநர் மீது எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா அளித்த புகாரின்படி,இந்த  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதி வேகமாக வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலுக்கேற்ற நுங்கு நாட்டுச்சர்க்கரை குல்பி!

ப்ளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுத்த சூர்யா - ஜோதிகா மகள்... குவியும் வாழ்த்துக்கள்!

அப்பாவாக போவதை ஈஸ்வரியிடம் கூறிய கோபி... அடுத்து என்ன நடக்கும்... அனல் பறக்கும் பாக்கியலட்சுமி புரோமோ!

தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: அரசு ஏற்பாடு!

நீங்க சுதந்திரமா இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை நிறுத்தினாலே போதும்!

SCROLL FOR NEXT