பிரதமர் மோடி நாளை (மே 26) தமிழகம் வருகை தரவிருப்பதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
-இதுகுறித்து பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:
மதுரை – தேனி இடையேயான அகல ரயில் பாதை உள்ளிட்ட ரூ 31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே-26) ஐதராபாத் மற்றும் சென்னைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஐதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) கல்வி நிறுவனத்தின் 20-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிற்பகல் 2 மணியளவில் பிரதமர் பங்கேற்கிறார்.அதோடு முதுநிலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு-2022 விழாவில் சிறப்புரை ஆற்றுகிறார்.
பின்னர் மாலை 5:45 மணியளவில் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி பிரதமர் பங்கேற்கிறார். அப்போது தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். அதில் மதுரை – தேனி இடையேயான அகல ரயில் பாதை உள்ளிட்ட திட்டமும் அடங்கும்.
-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.