ஸ்பெஷல்

ஜூன்- 3 கலைஞர் பிறந்த நாள்; அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு!

கல்கி

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி, இனி அரசு விழாவாகக் கொண்டாடப் படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் இன்று மின்சாரத்துறை, தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இவற்றுக்கு பதிலளித்துப் பேசும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது;

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். அவர் தமிழகத்தில் 5 முறை முதல்வராக பொறுப்பேற்று 19 ஆண்டுகள் பதவி வகித்தவர். மேலும் மகளிருக்கு சொத்துரிமை, உழவர்களுக்கு மின்சாரம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தவர். மேலும்,கைம்பெண் மறுமணம் மகளிர் சுய உதவிக் குழுக்கள்,பெரியார் சமத்துவப்புரம் ஆகிய திட்டங்களை தந்தவர். எனவே,கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்.

-இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT