ஸ்பெஷல்

பனிக் கட்டிக்கு அடியில் நீச்சல்: கின்னஸ் சாதனை படைத்த பெண்!

கல்கி

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அம்பெர் ஃபிலாரி என்ற பெண்மணி,  நார்வேவில் பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சலடித்து இரண்டாம் முறையாக புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன் நார்வேவில் 229 அடி 7.9 இன்ச் தூரம் நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்தார். இப்போது தன் சாதனையை தானே முறியடித்து 2-ம் முறையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அம்பெர் ஃபிலாரி கூறியதாவது;

''எனக்கு சிறு வயதில் இருந்தே நீச்சலடிப்பது மிகவும் பிடிக்கும். ஃபிக் ப்ளூ படம் பார்த்த பிறகு ஃப்ரீ டைவிங் மீது ஆர்வம் அதிகமானது. அதன்பிறகு தான் இதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். சில வருடங்கள் முன் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன்.

அதிலிருந்து மீண்டு வர நீச்சல்தான் கைகொடுத்தது. எனக்கு விருப்பமான நீச்சலில் புதுமையாக எதாவது செய்ய விரும்பினேன். அதனால்தான் தண்ணீருக்கு பதிலாக பனிக்கட்டிக்கு அடியில் நீந்தும் முயற்சியை மேற்கொண்டேன். அதற்கு கின்னஸ் பரிசு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அதையடுத்து என் சாதனையை நானே முறியடுக்கும் வகையில் மீண்டும் தீவிரமாக பயிற்சி எடுத்தேன். இந்த முறை கூடுதல் சவாலாக, பனிக்கட்டிகளுக்கு அடியில் நீச்சல் அடிக்கும்போது துடுப்பு மற்றும் டைவிங் சூட் பயன்படுத்தவில்லை. அந்த வகையில் 2-ம் முறையாக கின்னஸ் சாதனை படைத்தது மகிழ்ச்சி.

-இவ்வாறு அம்பெர் ஃபிலாரி தெரிவித்தார்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT