ஸ்பெஷல்

சீனர்களுக்கு விசா வாங்கிய வழக்கு: டெல்லி சிபிஐ-யில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்!

கல்கி

மத்திய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரசின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும் இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சிபிஐ சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று காலையில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.  அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பஞ்சாபில் டிஎஸ்பிஎல் எனும் நிறுவனத்தில் பணிபுரிய முறைகேடாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுத் தந்ததாகவும் இதற்காக ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்ற்தாகவும் கூறி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதையொட்டி ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்களை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்த கார்த்தி சிதம்பரம் நாடு திரும்பிய 16 மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT