ஸ்பெஷல்

கார்கில் நினைவு நாள்; புதுச்சேரியில் மரியாதை!

கல்கி

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று கார்கில் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது

கடந்த 1999 ஜூலை 26-ம் நாளன்று, காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட கார்கில் பகுதிகளை இந்திய வீரர்கள் மீண்டும் கைப்பற்றினர்.இந்த போரில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தாலும் 500-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

இதையடுத்து கார்கில் போரில் இந்திய வீரர்களின் வெற்றி மற்றும் தியாகத்தை கொண்டாடும் வகையில் ஜூலை 26 கார்கில் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  

கார்கில் வெற்றி தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் இன்று கார்கில் தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இன்று காலையில் இந்த போர் வீரர்கள் நினைவு சின்னத்துக்க்குச் சென்று புதுச்சேரி துணைநிலைஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT