சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சைப்பிரிவில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப் பட்டதாவது:
இந்த மருத்துவமனையின் கீழ்தளத்தில் இன்று காலையில் திடீரென தீவிபத்து ஏற்ப்பது. இதையடுத்து இங்கு சிகிச்சை பெரும் நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப் பட்டனர். தீ மற்ற வார்டுகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்தின் காரணம் என்ன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. வளாகத்தின் உள்ளே இருந்த ஒரு சிலிண்டர் வெடித்து அல்லது மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப் படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
-இவ்வாறு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்..
இதையடுத்து சம்பவ இடத்துக்கு தமிழக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.