ஸ்பெஷல்

யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக் பை யூஸ் பண்றீங்களா? உஷார்!

கல்கி

நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது

இந்தியாவில் 2009-ம் ஆண்டு முதன் முறையாக ஹிமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உள்ளிட்ட வடமாநிலங்களில் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளன.  தமிழகத்திலும் 2019-ம் ஆண்டு நெகிழிப் பைகள் மற்றும் பாலித்தீன் கவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது

இந்நிலையில், குறைந்த பயன்பாடு மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் யூஸ் & த்ரோ பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப் படுவதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிவித்ததாவது;

நாட்டில்  யூஸ் & த்ரோ பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப் படுகிறது.  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கைவிடுவதற்கு ஏற்கனவே மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் போதிய கால அவகாசம் அளித்து விட்டது.

-இவ்வாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

SCROLL FOR NEXT