நேற்று காலை 9.55 மணிக்கு நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போக்ரா நகரத்திலிருந்து 22 பயணிகளுடன் தாரா ஏர்லைன்ஸ் விமானம் மலை நகரமான ஜோம்சோமுக்கு கிளம்பியது. இது 20 நிமிட விமான சேவை ஆகும். மொத்தம் 4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த தாரா ஏர் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலைய ரேடார் தொடர்பை இழந்தது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான அந்த விமானத்தை தேடும் பணிகள் நடந்த நிலையில் விபத்துக்குள்ளான இடத்தை, நேபாள ராணுவம் இன்று காலையில் கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து நேபாள ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது;
விபத்துக்குள்ளான அந்த தாரா ஏர்லைன்ஸ் விமானம், இன்று காலையில் முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் சனோஸ்வெர் என்கிற இடத்தில் உள்ள மலைபகுதியில் கற்டுபிடிக்கப் பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணித்தவர்களின் நிலை குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இத்தேடுதல் பணியில் நேபாள ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப் பட்டுள்ளது. இந்த விமானம் காலை 9.55க்கு போக்ரா பகுதியில் புறப்பட்ட பின் கடைசி சிக்னல் 10.7 மணிக்கு கிடைத்துள்ளது. அதன்பிறகு, விமானம் ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டி கிடைத்த பின்பே இந்த விபத்துக்கான முழு காரணம் தெரிய வரும்.
-இவ்வாறு நேபாள ராணுவம்தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாளிகள் மற்றும் 3 பணியாளர்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விமானத்தை இயக்கிய மூத்த பைலட்டான பிரபாகர் கிமிரேவுக்கு, மலைப்பகுதிகளில் நீண்ட தூரம் விமானத்தை செலுத்திய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.