Nagesh in Thiruvilayadal 
ஸ்பெஷல்

நகைச்சுவை மட்டுமின்றி, உடல் மொழியாலும் ரசிக்க வைத்த சிரிப்பு சக்கரவர்த்தி நாகேஷ்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ந்தியாவின், ‘ஜெர்ரி லூயிஸ்’ என்று அழைக்கப்பட்ட நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று. நாகேஷ் இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். அவருடைய அலட்டிக்கொள்ளாத முக பாவங்களும் ஆபாசமில்லாத காமெடி வரிகளும், உடல் அசைவுகளும் ‘அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை, அவரைப்போல் யாராலும் வர முடியாது’ என்று இன்று வரை நிரூபித்துள்ளது.

அவரது ஏறி இறங்கும் குரல் ஜாலம், மாறும் உடல் மொழி, ஒல்லியான உடம்பை வைத்துக்கொண்டு அருமையான நடனம், கவலையை மறக்கச் செய்யும் சிரிப்புக்கு கேரண்டி தரும் நகைச்சுவை பேச்சு என்று ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் நடிகர் நாகேஷ். இவரது பூர்வீகம் மைசூர். தமிழ்நாட்டில் தாராபுரத்தில் வளர்ந்தவர். பெற்றோர் கிருஷ்ணா ராவ் - ருக்மணி. நாகேஷின் இயற்பெயர் நாகேஸ்வரன். இவரது செல்லப் பெயர் குண்டப்பா.

இளம் வயதில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஹைதராபாத்துக்கு வந்த நாகேஷ், ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி, மில்லில் வேலை என பலவற்றைப் பார்த்தவர், முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்து எம்ஜிஆர் அவர்களால் பாராட்டப்பட்டு முதல் பரிசையும் பெற்றவர்.

முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டதில்லை. யாரையும் பார்த்து காப்பி அடித்ததும் இல்லை. இவருக்கென்று ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு சிறப்பான முத்திரையைப் பதித்தவர். இவருடன் பெரும்பாலான படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா. இவர் எம்ஜிஆருடன் 45 படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் திருவிளையாடல் படத்தில் பிரமாதமான நடிப்பையும், உடல் அசைவையும் வழங்கியவர்.

நகைச்சுவையில் மட்டுமல்ல, குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும், ஹீரோவாகவும் கலக்கியவர். ‘நீர்க்குமிழி’ படத்தில் குணச்சித்திர வேடமும், ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் ஹீரோவாகவும், ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லனாகவும் சிறப்பாக நடித்தவர். அத்துடன், ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற படம் இவரது டைரக் ஷனில் வெளிவந்தது.

பண விஷயத்தில் மிகவும் கராரானவர் என்று சினிமா உலகில் இவரைப் பற்றிய ஒரு பேச்சு உண்டு. ஆனால், ‘எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே’ என்று சொன்ன கலைஞர் இவர்.

‘தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்கில் வந்து நடித்துக் கொடுத்தவர் சொன்ன வாக்கியம், ‘என் கடைசி படம் நல்ல படம்’ என்று கூறியிருக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களை சிரிக்க வைத்த கலைஞர் இவர்.

சினிமா ஒரு கனவு தொழிற்சாலை. கனவுகள் கனவுகளாகவே கலைவதும் நிஜங்களாக நிறைவேறுவதும் கனவு காண்பவரின் திறமையை பொறுத்தது. அப்படி திறமை இருந்தால் சினிமாவில் யார் வேண்டுமானாலும் நடிகனாகி விடலாம். ஆனால், கலைஞனாவது அத்தனை சுலபமல்ல.

ஒரு கலைஞனுக்கும் நடிகனுக்குமான வித்தியாசத்தை எந்த ஒரு அளவுகோலாலும் அளந்து விட முடியாது. மெலிந்த தேகம், அம்மைத் தழும்பு முகம் என்று சினிமா உலகுக்கு சற்றும் பொருந்தாத ஒரு இளைஞன் தன்னை கலைஞனாக நிலைநிறுத்திக் கொண்டார் என்றால் அதற்கு நடிகர் நாகேஷ் எடுத்துக் கொண்ட முயற்சியும், உழைப்பும்தான் காரணம்.

Param Rudra: இது 1000 கம்ப்யூட்டருக்கு சமம்! 

உலகில் மின்சாரம் குறைவாக பயன்படுத்தும் நாடுகள்!

குழந்தைகளுக்கு OCD இருப்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள்! 

எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைகள்!

குறைந்த அளவிலான போதைப்பொருள் பயன்பாடு உள்ள நாடுகள்!

SCROLL FOR NEXT