ஸ்பெஷல்

ஊட்டி சீசன் களைகட்டியது: அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை!

கல்கி

ஊட்டியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சீசன் களைகட்டி, அதிகளவு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாரும் ஊட்டி வரவில்லை.


இந்நிலையில், சர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகள் குறிந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இப்போது ஊட்டியில் சீசன் களைகட்டியுள்ளட்து. தற்போது வெளிநாடுகளில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்துள்ளது. நேற்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா, கண்ணாடி மாளிகை உட்பட அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்தனர். வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை துவங்கியுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் அவர்களை நம்பி தொழில் செய்யும் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால், நேற்றும் ஊட்டியில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று பிற்பகலுக்கு மேல் சாரல் மழை பெய்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வலம் வந்தனர்.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT