ஸ்பெஷல்

புத்தாண்டு நள்ளிரவில் தமிழக கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர் பாபு!

கல்கி

புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோயில்களில் பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்ய அனுமதியுண்டு என்று தமிழக இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு பல்வேறு தடைகள் விதித்துள்ளது. ஆனால் புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் நள்ளிரவில் பகதர்கள் கோயில்களுக்குவந்திருந்து சாமி தரிசனம் செய்ய தடையில்லை. ஆனால் பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தனிமனித இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். பிறக்கும் புத்தாண்டு நல்லாண்டாக அமைவதற்கு வேண்டி, கோயில்களுக்கு செல்பவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT