ஸ்பெஷல்

ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார்: ஒய்.ஜி.மகேந்திரன் தகவல்!

கல்கி

நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார் என்று அவரது உறவினரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் சிறப்புக் காட்சி நேற்று அவருக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதை ரஜினி குடும்பத்தினருடன் சென்று பார்த்தார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் நேற்று திடீரென்று அனுமதிக்கப்பட்டார். இது சமூகவலைதளங்களில் நேற்று பரபரப்பானது. இதையடுத்து ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு சாதாரண மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்பட்டது.

.இந்நிலையில் ரஜினிகாந்தை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு வந்த அவரது உறவினரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்ததாவது:

ரஜினிகாந்தின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது. அவரை நேரில் சென்று பார்த்து விட்டுத்தான் வருகிறேன். ரஜினிகாந்த் நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். 'அண்ணாத்தே' பட வெளியீட்டுக்கு ரஜினி கண்டிப்பாக வருவார். அவர் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கி றது.

இவ்வாறு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தெரிவித்தார்.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT