ஸ்பெஷல்

பாடகர் கேகே-வின் திடீர் மரணம்: சந்தேகத்துக்குரியது என வழக்கு பதிவு!

கல்கி

பிரபல திரைப்பட பாடகர் கேகே கொல்கத்தாவில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் நேற்றிரவு திடீரென மரணமுற்றார். அவரது இறப்பு சந்தேகத்துக்கு உரியது என வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. 

கேரளாவை சேர்ந்த பிரபல பாடகரான 53 வயதான கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் (வயது 53) தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி உட்பட பல மொழிகளில் பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 1997-ம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் .ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இடம் பெற்ற 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' பாடல் மூலம் கேகே தமிழில் அறிமுகமானார். மேலும் விள்மப்ரப் பாடல்களும் பாடியுள்ளார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே, கச்சேரி முடிந்ததும் உடல் நலக்குறைவால் உடனடியாக ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கேகே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனனர்.

பாடகர் கேகேவின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மற்றும் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாடகர் கேகே-வின் மரணம் சந்தேகத்துக்கு உரியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாடகர் கேகேவின் முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாக போலீஸ் வட்டாரம் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதனால் கேகே தங்கியிருந்த நியூ மார்க்கெட் கிராண்ட் ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் கேகே-வின் குடும்பத்தினர் இன்றூ காலை கொல்கத்தா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொப்பையை வெகு வேகமாகக் குறைக்கும் பிளாங்க் உடற்பயிற்சியின் நன்மைகள்!

கோடைக்கு இதமான Strawberry Lemonade வீட்டிலேயே செய்யலாமே!

எத்தனை பிரதோஷ வழிபாட்டை பார்த்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

செம டேஸ்டான 'தேங்காய் போளியும் வெண்டைக்காய் பகோடாவும்' செய்யலாம் வாங்க!

போலி நண்பனின் 6 அறிகுறிகள்… அவர்களைக் கண்டறிந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

SCROLL FOR NEXT