தொப்பையை வெகு வேகமாகக் குறைக்கும் பிளாங்க் உடற்பயிற்சியின் நன்மைகள்!

plank exercise
plank exercise https://athleticsweekly.com/

டல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் பருமனை குறைப்பதற்கும் நடைப்பயிற்சி மற்றும் பலவிதமான உடற்பயிற்சிகள் உதவுகின்றன. அதில் மிக முக்கியமானது பிளாங்க் எனப்படும் உடற்பயிற்சி. இது தொப்பையை வேகமாகக் கரைக்க உதவுகிறது. இதனுடைய நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பிளாங்க் உடற்பயிற்சி செய்யும் விதம்: தரையில் மென்மையான துணி ஒன்றை விரித்து குப்புற படுத்துக்கொள்ள வேண்டும். பின், கைகளின் முட்டிப்பகுதியில் உடலின் மேல் பகுதி தாங்கியவாறும், இரண்டு கால்களின் விரல்கள் உடலின் கீழ் பகுதியைத் தாங்கியவாறும் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் தலையிலிருந்து குதிகால் வரை உடல் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். முதலில் ஒன்று இரண்டு நிமிடங்கள் மட்டுமே இந்த நிலையில் நிலைத்திருக்க முடியும். பின்பு பயிற்சியின் காரணமாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் இந்த நிலையில் இருக்கலாம். இது உடல் எடை விரைவாக குறைக்கிறது.

பிளாங்க் உடற்பயிற்சியின் நன்மைகள்:

1. பிளாங்க் எனப்படும் உடற்பயிற்சி உடலின் தசைகளை வலுப்படுத்தி தொப்பையின் கொழுப்பைக் கரைப்பதுடன் வயிறு, முதுகு, கை மற்றும் தொடை பகுதிகளில் உள்ள தேவையில்லாத சதையை குறைத்து தசைகளை வலுவாக்குகிறது.

2. பெண்களுக்கு மிகுந்த நன்மையை தருகிறது. அவர்களின் அடி வயிறு, கீழ் முதுகு போன்ற இடங்களில் உள்ள முக்கிய தசைகளை வலுப்படுத்துகின்றன. முதுகு வலி இதனால் குறையும். வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடையும் குறையும்.

3. இந்தப் பயிற்சியில் தோள்கள், கைகள் மற்றும் கால்களில் உள்ள பல தசைகள் ஒரே நேரத்தில் ஈடுபடுத்தப்படுவதால் பெண்களுக்கு வயதாகும்போது ஏற்படும் மூட்டு வலி வருவதில்லை. இடுப்பு வலியும் தடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எத்தனை பிரதோஷ வழிபாட்டை பார்த்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
plank exercise

4. காயம் ஏற்படும் அபாயம் இதில் குறைவு. இந்தப் பயிற்சியை செய்வதன் மூலம் மையத் தசைகள் வலுப்பெறும். முதுகெலும்பு மற்றும் இடுப்பை உறுதிப்படுத்த இது உதவுகிறது. தினசரி உடற்பயிற்சியின்போது ஏற்படும் அபாயத்தை இது குறைக்கிறது.

5. இரு சக்கர வாகனத்தில் பயணிக்கக்கூடிய பெண்களுக்கு ஏற்படும் கழுத்து வலி, முதுகு வலியை சீர் செய்கிறது. அவர்களது உடலை கூன் போடுவதில் இருந்து தடுக்கிறது.

6. இந்தப் பயிற்சியை செய்ய எந்த உபகரணங்களும் தேவை இல்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சி ஆகும். பெண்களுக்கு மிகவும் ஏற்றது. மேலும் நீச்சல், ஓடுதல் மற்றும் பளு தூக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களுக்கு இந்தப் பயிற்சி அவர்களது செயல் திறனை மேம்படுத்த மிகவும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com