ஸ்பெஷல்

தென்னாப்பிரிக்கா சென்றது இந்திய கிரிக்கெட் அணி: கேப்டன் கோலி தலைமையில் போட்டி!

கல்கி

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான தொடரில் விளையாட உள்ளது.

இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட வீரர்கள், நேற்று காலை மும்பையிலிருந்து தனி விமானத்தில் தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ளனர். நேற்று மாலையில் ஜோக்கன்பார்க் சென்ற இந்திய வீரர்கள் 'தென் ஆப்பிரிக்காவை அடைந்துவிட்டோம்' என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் பதிவிட்டு சில புகைப்படங்களையும் வெளியிட்டட்து வைரலாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்திய வீரர்கள் அங்கு சென்றதும் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் சில பரிசோதனைகளுக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இணைவார்கள் என்று தெரியவருகிறது.

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் இம்மாதம் 26-ம் தேதி செஞ்சுரியனில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

SCROLL FOR NEXT