ஸ்பெஷல்

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி; முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பு!

கல்கி

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறூ நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்றுமுதல் மாநிலத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணீயன் கூறியதாவது;

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களில் தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்திருப்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.அந்த வகையில் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்படுகிறது. கடந்த 2021-ல் ஏப்ரல் மாதத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தற்போது பூஸ்டர் டோஸ்கள் செலுத்திக்கொள்ள தகுதி உடையவர்களாவார்கள்.

இவ்வாறூ அவர் தெரிவித்தார்.

அதன்படி இன்றூ முதல்கட்டமாக சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை இன்றூ சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள இமேஜ் அரங்கில் முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஐஸ்கிரீம் சாப்பிடும்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூர் - தெரிந்ததும் தெரியாததும்!

Wearable AC: சோனி நிறுவனத்தின் அட்டகாசமான கண்டுபிடிப்பு!

மனப் பந்தை மகிழ்ச்சியை நோக்கி நகர்ந்துங்கள்!

உள்ளூரிலேயே உற்சாகமாக டூர் போவது எப்படி?

SCROLL FOR NEXT