ஸ்பெஷல்

தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு: தமிழக அரசு அறிவிப்பு!

கல்கி

தமிழகத்தில் விவாகரத்து பெற்ற, கணவரை இழந்து தனியாக இருக்கும் பெண்கள், அல்லது பெற்றோரை விட்டு தனியாக இருக்கும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தனியாக வாழ்ந்து வரும் பெண்களும், சட்டபூர்வமான விவாகரத்து ஆன பெண்களும் அவர்கள் தனி குடும்பம் என்ற தகுதியின் அடிப்படையில் தன் பெயரில் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். இந்த புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பெண்ணின் வீட்டில் சமையலறை இருக்க வேண்டும். மேலும் அப்பெண் தான் தனியாக இருப்பதற்கான சுய அறிவிப்பை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆதார் நகல் மற்றும் கேஸ் சிலிண்டர் ரசீது ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் அதன் அடிப்படையில் அவருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT