Jyoti Amge 
ஸ்பெஷல்

உலகில் நாம் எட்டும் உயரம் நம் உடலின் உயரத்தை பொறுத்தது அல்ல!

தேனி மு.சுப்பிரமணி

கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில், உலகின் மிகக் குள்ளமான பெண்மணி என்று இடம் பெற்றிருந்த அமெரிக்கரான பிரிட்ஜெட் ஜோர்டான் என்பவர் 69 செ.மீ உயரம் கொண்டவராக இருந்தார்.

1993 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று பிறந்த ஜோதி ஆம்கேயின் உயரம், 2011 ஆம் ஆண்டில், அவரது 18 வது பிறந்தநாளன்று, நாக்பூரில் உள்ள வொக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அளக்கப்பட்டது. அமெரிக்கரான பிரிட்ஜெட் ஜோர்டானின் உயரத்தை விட, ஜோதி ஆம்கேயின் உயரம் 62.8 செ.மீ என்று குறைவாக இருந்ததால், அவரைப் பின்னுக்குத் தள்ளி, கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார் ஜோதி ஆம்கே. அன்றிலிருந்து இவரே, உலகின் மிகக் குள்ளமான பெண்மணியாகத் தொடர்ந்து இருந்து வருகிறார்.

அகோன்ட்ரோபிளாசியா எனப்படும் வளர்ச்சி ஒழுங்கின்மை காரணமாக, அவரது உயரம் அதிகரிக்காமல் போனது. அவரது எடையும் 5 கிலோ எனும் அளவிலேயே இருக்கிறது. 5 உடன் பிறப்புகளில் இவர் மிகவும் இளையவர். இவருடைய உயரத்திற்கேற்ற உடைகள் மற்றும் நகைகள் அனைத்தும் இவருக்கென்று தனியாகத் தயாரிக்கப்பட்டவைகளாக இருக்கின்றன. இதே போன்று, இவர் சாப்பிடுவதற்கான தட்டுகள் உள்ளிட்ட பொருட்களும் தனித்துச் செய்தே வாங்கப்படுகின்றனவாம்.

2009 ஆம் ஆண்டில் ‘உடல் அதிர்ச்சி: இரண்டு அடி உயரப் பதின்ம வயதினள்’ (Body Shock: Two Foot High Teen) எனும் ஆவணப் படத்தில் இவர் நடித்தார்.

அதன் பிறகு, இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6 இல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அதன் பின்பு, 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று, அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி: ஃப்ரீக் ஷோவின் நான்காவது சீசனில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகக் குள்ளமான மனிதராக, கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த நேபாளத்தைச் சேர்ந்த சந்திர பகதூர் டாங்கியை, உலகின் மிகக் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்கே 2012 ஆம் ஆண்டில் சந்தித்தார். அப்போது இருவரும் சேர்ந்து படமெடுத்துக் கொண்டனர். அந்தப் படம் கின்னஸ் உலக சாதனைகளுக்கான 2013 ஆம் ஆண்டின் 57 வது பதிப்பில் இடம் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT