Small Countries  
ஸ்பெஷல்

உலகிலுள்ள முதன்மையான சிறிய நாடுகளும் அவற்றின் தனித்துவமான அம்சங்களும்!

A.N.ராகுல்

பல வெளிநாடுகளைப் பற்றி நாம் யோசிக்கும்போது, ​​அங்குள்ள பரந்த நிலப்பரப்புகளும் நகரங்களும்தான் அடிக்கடி நினைவுக்கு வரும். இருப்பினும், சில நாடுகள் மிகவும் சிறியவை. அவை ஒரு திரைப்படத்தைப் பார்க்க எடுக்கும் நேரத்தைவிட குறைந்த நேரத்தில் கடந்து செல்லக்கூடியவை. அப்படி உலகின் மிகச்சிறிய நாடுகளும் அவற்றின் தனித்துவமான அம்சங்களையும் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

வாடிகன் நகரம் (Vatican City)

Vatican City

வாடிகன் நகரம், வெறும் 0.49 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட உலகின் மிகச்சிறிய நாடு. இத்தாலியின் ரோமில் அமைந்துள்ள இந்த நகரம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மிக மற்றும் நிர்வாக மையமாக செயல்படுகிறது. என்னதான் சிறிய அளவாக இருந்தபோதிலும், வாடிகன் நகரம் உலகளவில் குறிப்பிடத்தக்க மத செல்வாக்கைப் பெற்றுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா (St. Peter’s Basilica) மற்றும் சிஸ்டைன் சேப்பல் (Sistine Chapel) போன்ற அடையாளங்கள் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. வாடிகன் நகரத்தின் அடையாளம் கத்தோலிக்க மதத்துடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது.

மொனாக்கோ (Monaco)

Monaco

2.02 சதுர கிலோமீட்டர் பரப்பளவே கொண்ட மொனாக்கோ, அதன் ஆடம்பரமான வாழ்க்கை வசதியால், பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்களின் விளையாட்டு மைதானமாக அறியப்படுகிறது. பிரெஞ்சு ரிவியராவில் (Riviera) அமைந்துள்ள மான்டே கார்லோ கேசினோ (Monte Carlo Casino ) மற்றும் மொனாக்கோ கிராண்ட் பிரிக்கு (Monaco Grand Prix) இந்த நாடு பிரபலமானது. மொனாக்கோவின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் நிதித்துறைகளைத்தான் அதிகம் சார்ந்திருக்கிறது.

நவ்ரு (Nauru)

Nauru

ஓசியானியாவில் (Oceania) உள்ள ஒரு தீவு நாடான நவ்ரு, 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. பாஸ்பேட் சுரங்கங்களுக்கு (phosphate mining) பெயர் பெற்ற நவ்ரு, அதிகப்படியான சுரங்க நடவடிக்கைகளால் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. நவ்ரூவின் பொருளாதாரம் ஒரே வளத்தை பெரிதும் நம்பியுள்ளது. 

துவாலு (Tuvalu)

Tuvalu

26 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட துவாலு, உலகின் மிகச்சிறிய மற்றும் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இது, பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்வதால் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. துவாலுவின் இந்த நிலைமை உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்களால் சிறிய தீவு நாடுகளில் ஏற்படும் பாதிப்பை உலகம் முழுக்க அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சான் மரினோ (San Marino)

San Marino

61சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சான் மரினோ, இத்தாலியில் உள்ள உலகின் மிகப் பழைமையான குடியரசுகளில் ஒன்றாகும். இது ஒரு வளமான வரலாற்றையும் நன்கு பாதுகாக்கப்பட்ட  கட்டடக்கலையையும் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட அந்த வரலாறுதான் அதன் பிராந்தியத்திற்கு மிகவும் முதன்மையானது.  நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம், சுற்றுலா, வங்கி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில்தான் அதிகம் பயனடைகிறது.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT