ஸ்பெஷல்

பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்; இன்று துவக்கம்! 

கல்கி

தமிழக பள்ளி மாணவர்கள் புத்தகம் வாசிக்கும் பழகத்தை மேம்படுத்த தமிழக அரசு 'பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்' என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியது அந்த வகையில் இன்று திருச்சி, சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டத்தை  தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  துவக்கி வைத்தார். 

இதுகுறித்து பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; 

'பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்' என்ற இத்திட்டத்தின்படி,  ஒவ்வொரு பள்ளியிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களை வாசித்து, அதுகுறித்து விமர்சனம் எழுதலாம்.

அதை வைத்து ஓவியம் வரையலாம். நாடகம் நடத்தலாம். கலந்துரையாடல் செய்யலாம். இவற்றில் சிறந்த படைப்புகளைத் தந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டியில் துவங்கி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க அனுப்பப் படுவர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் என்கிற வகையில் 114 பேர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கவிருக்கும் முகாமில் பங்கேற்பார்கள்.  

இந்த முகாமில் அந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும். மேலும் அவர்களுடன் மாணவர்கள் உரையாடும் வாய்ப்பு  ஏற்படுத்தப்படும். மேலும், மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவர்களின் புத்தக அனுபவங்களும் பகிரப் படும். 

-இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.  

வரப்போகுது பாகுபலி அனிமேஷன் வெப் சீரிஸ்: எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

ஏழுமலையான் குடியிருக்கும் ஏழு மலைகள்!

விஜய் தேவரகொண்டாவின் அடுத்தப் படத்தின் அப்டேட்!

இடி, மின்னலை முன் கூட்டியே உணர்த்தும் 'தாமினி' செயலி!

அக்னி நட்சத்திர வெயிலை சமாளிக்க வெட்டிவேரை இப்படிப் பயன்படுத்தலாமே!

SCROLL FOR NEXT