ஸ்பெஷல்

கமல்ஹாசனின் கேரவன்! 

கல்கி

லதானந்த் 

 திரைத் துறையில் கமல்ஹாசன் பார்க்காத விஷயமே கிடையாது, எல்லாரும் கமலைப் பற்றி சொல்லக்கூடிய ஒரே விஷயம், அவரை திருப்திப்படுத்தவே முடியாது. அவரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்றால் நாம் அவரை விட இரண்டு மடங்கு அதிகமாக யோசிக்க வேண்டும்.ஆனால் சில நேரங்களில் கமல் அதையும் தாண்டி விடுவார். 

கமல் நடிப்பிற்கு அப்பாற்பட்டு சில விஷயங்களில் கவனம் செலுத்துவார் என்றால் அது அவருடைய கேரவன்.அவருக்கென்றே தனித்துவமான கேரவன்கள் வடிவமைக்கப்படுகின்றன. பொதுவாக இந்த கேரவனை பராமரிப்பவர்கள், "கமல் கண்கள் தப்புகள் அனைத்தையும் எளிதாக ஸ்கேன் செய்துவிடும்" என்று கூறுகின்றனர் 

கமலுக்கு வழங்கப்படும் சொகுசு கேரவனில் கிட்டத்தட்ட 4 திசையிலும் குளிர் காற்று வரும்படியான தன்மை கொண்ட ஏசி பொருத்தப்பட்டு உள்ளனவாம். இந்த கேரவனைத்தான் பிரதமர் நரேந்திர மோடி மகாபலிபுரம் வரும்போது பயன்படுத்தினாராம். அதுமட்டுமின்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏதாவது அவசரத் தேவைகள் என்றால் இந்த கேரவன் தான் அனுப்பப்படுமாம். 

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கேரவன் 1000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டுள்ளதாம் .ஒரு மினி 7 ஸ்டார் ஹோட்டலைப்போல் ஆடம்பரமாய் இருக்கும் இந்த கேரவனில் மேக்கப் போடுவதற்கு என்றே தனியாக இரண்டு அறைகள் இருக்கிறதாம். 

அதுபோக இயக்குனர், தயாரிப்பாளர்கள் என எவரேனும் திடீரென வந்தால் அவர்களுக்கென்று ஒரு தனி மீட்டிங் அறையும் இருக்கிறதாம். ஒவ்வொரு ரூமிற்கும், ஒவ்வொரு ஸ்பேர் ஏசி போடப்பட்டு உள்ளன. ஏதாவது அவுட்டோர் ஷூட்டிங் செல்லும்போது, ஏசி பழுதடைந்து விட்டால் அங்கே மாற்றுவது கடினம் என்பதால்தான் இந்த ஏற்பாடு. 

இந்த கேரவனை ஓட்டுவதற்கு என்றே பயிற்சி பெற்ற டிரைவர்கள்தான் பணி அமர்த்தப்படுவார்கள். அதுமட்டுமின்றி இதில் இருக்கும் டெக்னிகலான விஷயங்களையும் கையாளுவதற்குத் தனிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு ஓட்டுனர்களை ஒப்பந்தம் செய்கின்றனர். 

இவையன்றி கமல் வேறு ஏதேனும் திருத்தங்கள் சொன்னால் உடனடியாக அவை நிறைவேற்றப்படுகின்றவாம் 

************ 

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT