ஸ்பெஷல்

வலுவடைந்தது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கல்கி

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவலுப்பெற்றதால், சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13-ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட்அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:

சென்னையிலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையை நெருங்கிவந்து தெற்கு ஆந்திரா–வடதமிழம் அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பிற்பகலிலிருந்து கனமழை பெய்யும்.

-இவ்வாறு சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

4 Types of Introverts: நீங்கள் இதில் எந்த வகை!

SCROLL FOR NEXT