ஸ்பெஷல்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

கல்கி

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. அதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலேயே நிலவும். நாளையும் (டிசம்பர் 18) நாளை மறுநாளும் (டிசம்பர் 19) தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டி இருக்கும்.

குறிப்பாக இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (டிசம்பர் 19) தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிமீ முதல் மணிக்கு 60 கிமீ வேகம் வரை வீசக்கூடும். அதனால் இக்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT