ஸ்பெஷல்

#Breaking: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு!

கல்கி

கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டமான வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீட்டை அறிவித்து சட்டம் இயற்றியது. இந்தற்கு எதிர்க்கட்சிகள் உடபட பலரும் தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். இந்த சட்டத்தை எதிர்த்து 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன.

இந்நிலையில் இன்று இநத வழக்கு விசாரணையின்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பு அறிவித்தது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறிது முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

SCROLL FOR NEXT