ஸ்பெஷல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் ரெய்டு: அதிமுக-வினர் சர்ச்சை!

கல்கி

தமிழகத்தின் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் இன்று ரெய்டு நடத்தப்படுவதை கண்டித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அநதவகையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது  தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கே.சி வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டியில் உள்ள கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசை கண்டித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது போலீசாரை கீழே தள்ளிவிட்டு வேனில் இருந்து இறங்கிய அதிமுகவினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பெர்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

இதயத்தை பலப்படுத்தும் அருகுலா கீரை!

வாழ்க்கையில் சாதிக்க ரஷ்ய விஞ்ஞானி கூறும் 8 வழிகள்!

சிறுகதை – பூஞ்சிறகு!

Drumstick Dosa: முருங்கைக்காய் தோசை வித் இஞ்சி சட்னி!

SCROLL FOR NEXT