ஸ்பெஷல்

அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா கொரோனா வைரஸ்: மருத்துவர்கள் கவலை!

கல்கி

அமெரிக்காவில் டெல்டா கொரோனா பரவல் அதி தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 1 வாரத்தில் சராசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 72 ஆயிரமாக பதிவாகியுள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு கரோனா காரணமாக 1,800 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிர கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவ துறை இதுகுறித்து கூறியதாவது:

அமெரிக்காவில் உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. இன்னும் பலருக்கு தடுப்பூசி மீதான தயக்கம் இருப்பதால், அதை செலுத்தி கொள்ள முன்வராததுதான் இந்த கொரோனா அதிகரிப்புக்குக் காரணம். இதை இந்நிலியிலேயே கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை கவலையளிக்கும் வகையில் மாறக்கூடும்

-இவ்வாறு அமெரிக்க மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

கோடைகாலத்தில் சருமம் அழகு பெற சில டிப்ஸ்!

மனித வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்தும் இரண்டு விதமான சிந்தனை அமைப்புகள்!

தினம் ஒரு புதிர்: உங்கள் பார்வை கூர்மையாக உள்ளதா? முடிந்தால் மறைந்துள்ள எழுத்தை கண்டுபிடியுங்கள்!

தீப திரிகளின் வகைகளும்; பயன்களும்!

அருகி வரும் அரியக் கலை தெருக்கூத்து!

SCROLL FOR NEXT