ஸ்பெஷல்

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்: அனைவருக்கும் சுகாதார அடையாள அட்டை திட்டம் தொடக்கம்!

கல்கி

நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.

கடந்த மாதம் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி தற்போது 6 யூனியன் பிரதேசங்களில் இது சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து காணொளி மூலம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடு முழுமைக்குமான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி குடிமக்களின் சுகாதார விவரங்களை உள்ளடக்கிய அடையாள அட்டை வழங்கப்படும்.
சுகாதார கணக்கு என்ற அடிப்படையில் இதனை மொபைல் செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும். இதில் நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறையிலான அனைத்து தகவல்களையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பஜாஜ் பல்சரின் 400 சிசி புதிய பைக் அறிமுகம்: இனிமே செம ஸ்பீடு தான்!

திருமண வாழ்க்கை சிதையாமல் இருக்க சில சிம்பிள் யோசனைகள்!

சில்லரை விற்பனை மையங்களில் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்ந்தது! ஆச்சரியத்தில் ஃபிளிப்கார்ட், அமேசான்!

முருங்கையில் மதிப்புக் கூட்டு பயிற்சி: விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க!

குழந்தைப் பேறு வரம் அருளும் அபூர்வ விருட்சம் அமைந்த கோயில்!

SCROLL FOR NEXT