ஸ்பெஷல்

இந்திய சந்தைகள் ஏற்றம்: சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளியில் வர்த்தகம்!

கல்கி

இந்திய சந்தைகள் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டி ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 461.86 (0.77%) புள்ளிகள் உயர்ந்து, 60,139.புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 131.35 (0.74%) புள்ளிகள் உயர்ந்து 17,921 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் இன்று ஏற்றத்தில் தொடங்கின. இதன் எதிரொலிக இந்திய சந்தை ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கு சாதகமாக ரெப்போ விகிதமும் எதிர்பார்த்தை போல மாற்றம் செய்யப்படவில்லை.

இதனிடையே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 பைசா குறைந்து, 75.02 ரூபாயாக காணப்படுகின்றது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 74.78 ரூபாயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

SCROLL FOR NEXT