ஸ்பெஷல்

இமாச்சலப் பிரதேச பனிப்பாறையில் சிக்கி 14 பேர் தவிப்பு: 2 பேர் உயிரிழப்பு!

கல்கி

இமாச்சலப் பிரதேசத்தின் லஹால் ஸ்பிட்டி பகுதியில் மலையேற்றம் சென்ற குழுவில் 14 பேர் பனிப்பாறைகளில்ல் சிக்கியுள்ளனர். 2 பேர் உயிரிழந்தனஎ.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள லஹாஸ் ஸ்பிட்டி எனும் பகுதியில் உள்ள பனிப்பாறையில் ஏறுவதற்காக ஒரு குழு கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக சென்றுள்ளது.5000 மீட்டருக்கு மேல் அந்த குழுவினர் மலையில் ஏறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக அவர்கள் முன்னோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் சென்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து மலை பகுதியில் சிக்கித் தவிக்க கூடிய 14 பேரையும் மீட்பதற்காக மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூறியுள்ள லஹாஸ் ஸ்பிட்டியின் துணை ஆணையர் நீரஜ் குமார் தெரிவித்ததாவது:

லஹாஸ் ஸ்பிட்டி மலைப் பகுதியில் சிக்கித் தவிக்கும் 14 பேரையும் விரைவில் மீட்பதற்காக பேரிடர் நிவாரணக் குழ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் மீடகப்ப்டுவார்கள். அங்கு உயிரிழந்தவர்களின் உடல்கள் கீலாங் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

வாங்க விமானத்தில் பறக்கலாம்!

ஹேர் கலரிங் பண்ணிக்கொள்ள ஆசையா? கவனிக்க வேண்டியது என்ன? எந்த வகையான கலரிங் நல்லது?

சிரித்து வாழ வேண்டும்!

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

SCROLL FOR NEXT