ஸ்பெஷல்

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பேசி சுமுக முடிவு: திமுக!

கல்கி

தமிழகத்தில் 9 மாவட்டங்களீல் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி, சுமுக முடிவு எடுக்கப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டுகட்டமாக அக்டோபர்- 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார்.

இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி செப்டம்பர் 22-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்து பேசி, சுமுக முடிவு எடுக்கப்படும். இதை செய்யும்படி மாவட்டக் கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

-இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஐஸ்கிரீம் சாப்பிடும்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூர் - தெரிந்ததும் தெரியாததும்!

Wearable AC: சோனி நிறுவனத்தின் அட்டகாசமான கண்டுபிடிப்பு!

மனப் பந்தை மகிழ்ச்சியை நோக்கி நகர்ந்துங்கள்!

உள்ளூரிலேயே உற்சாகமாக டூர் போவது எப்படி?

SCROLL FOR NEXT