ஸ்பெஷல்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

கல்கி

மிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தக்வல் வெளீயிட்டுள்ளது.

இதுறித்து வெளீயிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று தென் மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாக இருக்கும்.

-இவ்வாறு சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதேபோன்று, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

குழந்தைகள் புத்தகப் பிரியர்களாக வளரச் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

தேவையற்ற புற்களை அடிக்கடி களை எடுக்க வேண்டியுள்ளதா? சமாளிக்க என்னென்ன வழிகள் உள்ளன?

இன்பாவுக்கு வந்தது இன்பம் தரும் செய்தி!

அடேங்கப்பா... கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் பயன்கள்!

லோன் வாங்கப் போறீங்களா? அதற்கு முன்பு இதை கொஞ்சம் படிங்க!

SCROLL FOR NEXT