ஸ்பெஷல்

திபெத்தில் சீன ஆதிக்கம்: பாட புத்தகங்களை சீன மொழிக்கு மாற்ற உத்தரவு!

கல்கி

திபெத்தில் பாடப் புத்தகங்களை சீன மொழியான மாண்டரினில் மொழிபெயர்க்க திபெத் மதகுருக்களுக்கு சீனா நெருக்கடி கொடுத்துள்ளது.

திபெத் பள்ளிகளில் பாடங்கள் இனி சீன மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும் என, சீனா கடந்த மாதம் உத்தரவிட்டதுஇதை எதிர்த்துப் போராடிய இரு திபெத் மாணவர்கள் சீனாவால் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 3 நாட்கள் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:

திபெத்தில் உள்ள புத்த துறவிகளும், பெண் பிக்குணிகளும் சீன மொழியில்தான் தொடர்பு கொள்ள வேண்டும். திபெத் மதகுருக்கள் பாடப் புத்தகங்களை மாண்டரினில் மொழிபெயர்க்க வேண்டும் என, சீனா உத்தரவிட்டு உள்ளது. தன்னாட்சி பெற்ற நாடான திபெத்தில் சீனா தன் அதிகாரத்தைக் நிலைநாட்டவே இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கருதப் படுகிறது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

SCROLL FOR NEXT