ஸ்பெஷல்

மாநிலங்களவை தேர்தல்: மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல்!

கல்கி

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலங்களவைத் தேர்தலில்  மத்திய பிரதேச எம்.பி. பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை பாஜக தலைமை அறிவித்திருந்தது. அதில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இப்பதவிக்கான தேர்தல் .

அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன் வேட்பாளரை நிறுத்தாததால், எல்.முருகன்  போட்டியின்றி எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது..

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் இம்மாதம் 27-ம் தேதி என்பதால்,  அதற்கு பிறகு எல்.முருகன் போட்டியின்றி தேர்வு பெறுவதை தேர்தல் கமிஷன் முறைப்படி அறிவிக்கும் என தகவல் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT