விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் நிறைவு: கிங் கோலி சாதனை!

எம்.கோதண்டபாணி

ந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இன்றோடு (18.8.2023) 15 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த 15 ஆண்டுகளில் இந்திய அணியில் தான் ஒரு சாதாரண வீரராக இருந்து, இந்திய அணியின் கேப்டனாக தன்னை உயர்த்திக் கொண்டு, மீண்டும் சில காரணங்களால் தன்னை ஒரு சக வீரராக தகவமைத்துக் கொண்ட பெருமை இவருக்கு உண்டு.

தனது இந்த 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்ட இவர், கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரராகத் திகழ்கிறார். இவர் மூன்று வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், அதிக ரன்கள், சதங்கள், ஆட்ட நாயகன் விருதுகள் என ஐசிசியின் பல்வேறு விருதுகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இவரை ரசிகர்கள், ‘கிங் கோலி’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

விராட் கோலி இதுவரை இந்திய அணிக்காக, 111 டெஸ்ட் போட்டிகள், 275 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 115 டி20 போட்டிகள் என மொத்தம் 501 சர்வதேச போட்டிகளில் 25,582 ரன்களைக் குவித்து சாதனை புரிந்து இருக்கிறார். இதில், இவர் அடித்த 7 இரட்டை சதங்களும், 76 சதங்களும், 131 அரை சதங்களும் அடங்கும். இந்த சதங்களின் எண்ணிக்கை மூலம், இவர் விரைவில் சச்சின் டெல்டுல்கரைத் தொடர்ந்து சதங்களில் சதம் அடிப்பார் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT