விளையாட்டு

உடலுக்கு நடைபயிற்சி… மனதுக்கு மூச்சு பயிற்சி!

கல்கி

பஞ்ச பூதங்களின் ஆதிக்கத்தில் தான் மனிதன் வாழ்க்கை நடத்துகிறான். மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ, காற்று, நீர், உணவு முக்கியம். அதிக அளவில் பச்சைக் காய்கறிகள், கீரை வகை, கடல் உணவு, பழங்கள் சாப்பிட வேண்டும். உடல் உழைப்புக்கு ஏற்ற அளவுக்கு உணவு உட்கொள்ள வேண்டும். அதிகம் கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடுவோர், உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்து, அந்தக் கொழுப்பைக் கரைக்க வேண்டும்.

மன ஆரோக்கியத்துக்கு தினமும் அதிகாலையில் எழுந்து, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவை செய்ய வேண்டும். காலை வெயிலில் காற்றோட்டமான இடத்தில், உடற்பயிற்சி செய்வது நல்லது. நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் போன்றவை நல்லது. மூளைக்கும் வேலை கொடுக்க வேண்டும். சத்தான உணவை குறித்த நேரத்தில் சாப்பிட்டு, இரவு 10 மணிக்கு முன்பே தூங்கச் சென்று, முறையான உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால்…. ஆரோக்கியமாக வாழலாம்.

-ஜெயா சம்பத், கொரட்டூர்.

நீங்க சுதந்திரமா இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை நிறுத்தினாலே போதும்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு அவசியம்!

குழந்தைகள் தர்பூசணி பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

குறைவான வருமானம்; நிறைவான வாழ்க்கை!

SCROLL FOR NEXT