விளையாட்டு

அனில் கும்பளே சாதனையை முறியடித்த அஸ்வின்

ஜெ.ராகவன்

சொந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி, கும்பளேவின் சாதனையை முறியடித்துள்ளார் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆமதாபாதில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் அவர் இந்த சாதனையைப் புரிந்தார்.

அதாவது சொந்த மண்ணில் 26-வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அஸ்வின். இதன் மூலம் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பளேவின் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.

அதிக எண்ணிக்கையில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் குவித்த வீரர்களின் பட்டியலில் ரங்கனா ஹெராத்துடன் அஸ்வின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை அணியைச் சேர்ந்த முத்தையா முரளீதரன், இலங்கை மண்ணில் 45 முறை ஐந்து விக்கெட்டுகள் சாய்த்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் அஸ்வின் இதுவரை 32 முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். உலக அளவில் 6-வது இடத்தை அவர் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, சமூக வலைத்தளங்கள் மூலம் அஸ்வினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மிகச் சிறப்பாக பந்து வீசி அஸ்வின் இந்த சாதனையை புரிந்துள்ளார். அவரது சாதனை தொடரட்டும் என்று கங்குலி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்தியா முதல் இன்னிங்ஸில் விக்கெட் நஷ்டமின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு ஆட்டமிழந்த்து.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ரோஹித் சர்மா 17 ரன்களுடனும், ஷுபம் கில் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 91 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். உஸ்மாமன் கவாஜாவின் விக்கெட்டை அக்ஸர் படேல் கைப்பற்றினார்.

முன்னதாக முதல் நாள் ஆட்டத்தின்போது முகமது ஷாமி 134 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

முதல்நாள் ஆட்டத்தில் 255 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தொடர்ந்த்து. கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் (114) ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இருவரும் சேர்ந்து 123 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கவாஜா விக்கெட்டை அக்ஸர் வீழ்த்தினார். அதன் பின்னர் வந்த டோட் மர்பி (41) மற்றும் நாதன் (34) இருவரும் தங்கள் அணிக்கு 70 ரன்கள் சேர்த்தனர்.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT