இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் சரிபட்டு வரமாட்டார் என்று ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்னர் நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. இதனையடுத்து கேப்டன் மீதும் பயிற்சியாளர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பிசிசிஐயும் அவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து கவுதம் கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சிகள் வழங்கி வருகிறார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கம்பீர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு சரிபட்டு வர மாட்டார் என்று பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கம்பீர் பேசியுள்ளார். அதாவது இந்திய கிரிக்கெட் பற்றி ஏன் பாண்டிங் பேசுகிறார். அவர் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பற்றி மட்டும் பேசட்டும் என்றார். இதற்கு பல ஆஸ்திரேலிய வீரர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின், "கம்பீர் பேசியது நிச்சயம் நல்ல விஷயம் கிடையாது. அது எனக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் கம்பீரிடம் ஒரு எளிதான கேள்வி தான் கேட்கப்பட்டது. ஆனால் அவர் ரிக்கி பாண்டிங் இன்னும் தமக்கு எதிராக விளையாடும் வீரராக பார்க்கிறார் என நினைக்கின்றேன்.
ரிக்கி பாண்டிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு வர்ணனையாளராக இருக்கிறார். இதற்கு அவருக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. அவர் தனது கருத்தை அதுவும் நியாயமான கருத்தைதான் வழங்குகிறார் என்றார்.
விராட் கோலி ஃபார்ம் சரிகிறது. அதேபோல் ரோஹித் ஷர்மாவும் சரியாக விளையாடவில்லை. இதுபோன்ற சமயங்களில் ஒரு பயிற்சியாளர்தான் நிலையை கொண்டுவர வேண்டும். ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து இரண்டு முறை இந்திய அணி வெற்றியை பெற்று இருக்கிறது.
ரவி சாஸ்திரி அணியில் சிறந்த ஒரு சூழலை உருவாக்கினார். ஆனால், தற்போது உள்ள பயிற்சியாளர் கொஞ்சம் சிக்கலானவர். போட்டி மனப்பான்மையுடன் இருக்கிறார். அது கண்டிப்பாக நல்ல விஷயம் கிடையாது என்று பேசினார்.
ஒரு கேள்விக்கு கம்பீர் கோபப்பட்டார். ஆனால், இங்கு வந்தால் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்ப்போம்.” என்று டிம் பெயின் பேசியுள்ளார்.