Ishan Kishan and Shreyas Iyer
Ishan Kishan and Shreyas Iyer 
விளையாட்டு

இஷன் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐய்யரை கழட்டிவிட்ட BCCI.. இந்திய அணியில் மீண்டும் விளையாடுவார்களா?

பாரதி

இந்திய வீரர்கள் இஷன் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐய்யரை பிசிசிஐ ஊதிய ஒப்பந்தப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் இருவரும் இனி இந்திய அணியில் விளையாட மாட்டார்கள் என ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக வீரர்கள் தொடர்ந்து ஒழுங்கீனச் செயல்களில் ஈடுப்பட்டால் பிசிசிஐ டீமெரிட் பாய்ன்ட் கணக்கு வைத்து, ஒரு ஆண்டுக் காலம் நீக்கும் அல்லது போட்டிகள் கணக்கு வைத்து அணியிலிருந்து நீக்கும். அதேபோல் ஊதிய ஒப்பந்தப் பட்டியலிலிருந்தும் பிசிசிஐ நீக்கும். அதாவது ஒரு வருடத்திற்கு பிசிசிஐ வீரர்களுக்கு எந்த சம்பளமும் வழங்காது. ஆனால் சம்பளம் இல்லாமல் வீரர்கள் இந்திய அணியின் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம்.

அந்தவகையில் இப்போது இஷன் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐய்யரை பிசிசிஐ ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் இருவரையும் பிசிசிஐ ரஞ்சிப் போட்டியில் விளையாட வேண்டுமென்று கூறியும் விளையாடமல், ஐபிஎல் போட்டிகளுக்காகப் பயிற்சி செய்து வந்ததால்தான். பிசிசிஐயின் ஊதிய ஒப்பந்தத்தின் விதியில் ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் வீரர்கள் இல்லையென்றால், அவர்கள் இந்திய அணிக்காக விளையாடக்கூடாது என்ற எந்த விதியும் இல்லை.

ஆகையால் அவர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடலாம். இதற்கு உதாரணமாக ரிங்கு சிங், ரவி பிஸ்னாய், ஜிதேஷ் சர்மா ஆகியோர் சில காலங்களுக்கு முன்பு வரை பிசிசிஐயின் ஊதியம் இல்லாமல்தான் இந்திய அணியில் விளையாடி வந்தார்கள். தற்போது தான் அவர்கள் ஊதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

அதேபோல் இஷானும் ஸ்ரேயஸும் ஊதியம் இல்லாமல் இந்திய அணியில் விளையாடலாம். ஆனால் அடுத்த 12 மாதங்களுக்கு மட்டும் ஊதியம் கிடையாது. பின் மீண்டும் ஊதிய பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். ஒருவேளை மீண்டும் மீண்டும் அவர்கள் பிசிசிஐயின் விதியை மதிக்கவில்லை என்றால், மீண்டும் தண்டனை அளிக்கப்படும். ஆனால் பிசிசிஐ அந்த வீரர்களை இந்திய அணியில் விளையாட வைக்க அவர்களை இழுத்தடிக்கும் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

ஒருவேளை இருவரும் விளக்கக் கடிதமோ அல்லது மன்னிப்புக் கடிதமோ அல்லது இனி நாங்கள் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவோம் என்ற கடிதத்தையோ பிசிசிஐக்கு அனுப்பி வைத்தால், ஊதிய பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளது. அப்படி சேர்த்தால் எப்போதும் போல் ஊதியத்துடனே இந்திய அணியில் இருவரும் விளையாடலாம்.

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

Kitchen Queen's tips: சமையலில் ராணியாக சில சமையல் குறிப்புகள்!

பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT