விளையாட்டு

பனங்கிழங்கில் இவ்வளவு நன்மைகளா?

கல்கி டெஸ்க்

பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கைவெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

பனங்கிழங்கு குளிர்ச்சியைத் தரவல்லது. மேலும் குளிர் காலத்தில் உடல்வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவும் கிழங்கு இது. வயிற்றில் உள்ள பூச்சிகளைஅழிக்கும் ஆற்றலும் பனங்கிழங்கில் உள்ளது.

பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.பனங்கிழங்கை வேகவைத்துசிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்துமாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம்பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும்.

பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்புதேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.

பனங்கிழங்கில் நார்சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும் போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றைதலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

வயிறு மற்றும் சிறுநீரக பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவைஉணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்துகாலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்திஅதிகமாகும்.

சர்க்கரைநோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடியபொருட்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.

பனங்கிழங்கில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்தும் அதிகம்இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுவதைக் குணமாக்கும்.

பனங்கிழங்கில் பித்தம் சற்று அதிகமாக இருப்பதால், இதைச் சாப்பிட்டப் பின்சிறிது மிளகு மற்றும் பூண்டுகளை கலந்து சாப்பிட்டு விட்டால் பித்தம்சரியாகிவிடும்.

பனங் கிழங்கை தண்ணீர் விட்டு அவித்து பின்னர் மாவாக்கிப் புட்டு, கூழ் உள்ளிட்டஉணவு வகைகளைச் செய்யலாம்.மேலும் அவித்த கிழங்கை வெயிலில் உலர்த்திப்பெறப்படும் பொருளை கிராமப்புறங்களில்பயன்படுத்துகிறார்கள். இது நீண்ட நாட்கள்கெட்டுப் போகாமல் இருக்கக் கூடியதாகும்.

பனங்கிழங்கை அவித்து காய வைத்து, பொடித்து, அதில் சர்க்கரை மற்றும்தேங்காய் சேர்த்து சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும். இந்தக் கிழங்கைஅவித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு அரைத்து துவையலாகவும்உண்ணலாம்.

ஆனால் பனங்கிழங்கில் உள்ள வேதி பொருட்கள் நம் உடம்பில் இன்சுலினைசுரக்க வைத்து இரத்தத்தின் சர்க்கரையின் அளவைகட்டுப்படுத்துகிறது.பனங்கிழங்கு சாப்பிடுவோர் பரம்பரைக்கே சர்க்கரை நோய்வராது என்பது பெரியோர்களின் கருத்து ஆகும்.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT