விளையாட்டு

வெற்றிலை இப்படி தான் போடணுமாம் ….!

கல்கி டெஸ்க்

"எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடிபூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும். அதனால் அது வெற்று இலை என்பதே மருவி வெற்றிலையானது. இத்தகைய வெற்றிலைக்கென தனிச் சிறப்புகள் பல உண்டு .

வெற்றிலையின் இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

நமது உடலில் சுரக்கும் 24 விதமான “அமினோ அமிலங்கள்” வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த “அமினோ  அமிலங்களை” வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் “தாம்பூலம்” தரிக்கும்  வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

வெற்றிலையின் காம்பை யார் தின்றாலும் அவர்களுக்கு ஞானம் வராது.

மூதேவி என்னும் தேவியால் வறுமையே உண்டாகும்.

ஏனெனில் காம்பு பகுதி மூதேவிக்கு உரிய பாகமாகும்.

வெற்றிலை உண்ண வேண்டுமாகின் காம்பை அடியோடு கிள்ளி எறிந்து விட்டுசாப்பிடவும்.

மேலும் முனை ஒடிந்த வெற்றிலை சாப்பிட்டாலும் பலன் இல்லை .

காரணம் வெற்றிலை முனையில் ஸ்ரீதேவி குடிகொண்டிருப்பார்.

அவரை நீக்கி சாப்பிட்டால் செல்வ வளம் சேராது .

பூஜைக்கு வெற்றிலை வைக்கும் போது முனை ஒடியாத ,அழுகல் சொத்தைஇல்லாத ,ஓட்டை இல்லாத வெற்றிலையே படையலுக்கு சிறந்தது .

வெற்றிலை கிழிந்தோ. காய்ந்தோ இருந்தால் கூட படையலுக்கு உதவாது .

வெற்றிலையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை வாழ்கிறார்கள்.

எனவே வெற்றிலையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த பாக தேவதைபாதிக்கப்படும்,

பின்பு அருள் கிடைக்காது, சாபம் தான் கிட்டும். கவனம் தேவை

அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு  சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி  வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT