விளையாட்டு

பிரேசில் கால்பந்து போட்டி: நடுவரை பந்தாடிய வீரர் கைது!

கல்கி

பிரேசிலில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவரை காலால் உதைத்து தாக்கிய வீரர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ரியோ கிராண்டே என்ற இடத்தில் உள்ளூர் கால்பந்து தொடர் நடந்தது. இந்த தொடரில் நேற்று சா பாலோ என்ற அணியும், குவாரணி என்ற அணியும் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வில்லியம் ரிபிரோ என்ற வீரருக்கு நடுவராக இருந்த ரோட்ரிகோ கிரிவெல்லரோ என்பவர் ஃப்ரீ கிக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் கோபமடைந்த வில்லியம் ரிபிரோ அந்த நடுவரை தலையால் முட்டி கீழே தள்ளிவிட்டார். மேலும் தன் காலால் எட்டி உதைத்தார். இதனால் படுகாயம் அடைந்த நடுவர் து மயங்கி சரிய, சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போட்டியை நிறுத்திவிட்டு, ஸ்ட்ரெச்சரை கொண்டு வருமாறு சைகை செய்தனர். இதனால் போட்டி 14 நிமிடம் நிறுத்தப்பட்டது.

தாக்குதலில் காயம் அடைந்த நடுவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதனை அடுத்து வில்லியம் ரிபிரோ என்ற வீரரை போலீசார் கைது செய்து, கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாண்டில் 113வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சாவ் பாவ்லோ விளையாட்டு மன்றம், இந்த சம்பவத்தை 'துயரம் மிகுந்த நாளாக' குறிப்பிட்டுள்ளது.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT