DC Vs GT
DC Vs GT 
விளையாட்டு

DC Vs GT: குஜராத் அணியின் குறைந்த இலக்கு… 9 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்த டெல்லி அணி!

பாரதி

IPL 2024 தொடரின் 32வது போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்ததால், குஜராத் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. குஜராத் அணியின் அதிகபட்ச ரன்கள் என்றால், அது ரஷித் கானின் 31 ரன்கள்தான். மற்ற அனைத்து வீரர்களுமே டெல்லி அணியின் பவுலிங்கில் மோசமாக அவுட்டாகி வெளியேறினார்கள். டெல்லி அணியின் பவுலிங்கைப் பொறுத்தவரை முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் பந்து வீசி, அதில் 3 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குல்தீப் யாதவ் 1 ஓவரில் 2 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மேலும், கலீல் அஹமத் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்து எதிரணி 100 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே ஆல்அவுட் ஆக்கினார்கள். இந்த சீசனில் 100 ரன்களுக்கும் குறைவான ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அணி என்றால், அது குஜராத் அணிதான்.

90 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு, இந்த இலக்கை அடைவது மிகவும் எளிதாகிவிட்டது. டெல்லி அணியில் களமிறங்கிய பிரித்வி ஷா 7 ரன்களும், அதிகபட்சமாக ஜேக் ஃப்ரேசர் 20 ரன்களும், அபிஷேக் போரல் 15 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அதேபோல் ஹோப் 19 ரன்களும், ரிஷப் பண்ட் 16 ரன்களும், சுமித் குமார் 9 ரன்களும் எடுத்தனர்.

இதனால், டெல்லி அணி வெறும் 8.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து, இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. டெல்லி அணி பவுலிங்கில் சிறப்பாக விளையாடி இலக்கை குறைத்தது, அணிக்கு மிகப்பெரிய ப்ளஸாக அமைந்தது.

இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில், டெல்லி அணி 7 போட்டிகளில் 3 போட்டிகள் வென்று 6வது இடத்திலும், குஜராத் அணி 7 போட்டிகளில் 3 போட்டிகள் வென்று 7வது இடத்திலும் உள்ளன.

“காலில் விழவில்லை என்பதால், அணியில் இடம் தரவில்லை” – பகீர் கிளப்பிய முன்னணி வீரர்!

சுட்டெரிக்கும் வெயிலில் நம்மைக் குஷிப்படுத்தும் கோடை மழை! ஆனால்...

நரசிம்மரை கட்டிவைத்த வேடனின் கதை தெரியுமா?

Beard Growth Tips: இது தெரிஞ்சா தாடி வளர்ப்பது ரொம்ப ஈசி! 

மீண்டும் வருவாரா தோனி?

SCROLL FOR NEXT