பிசிசிஐ 
விளையாட்டு

முடிவெடுக்கும் அதிகாரம் எங்கள் கையில் இல்லை! ரோஜர் பின்னி திட்டவட்டம்!

கல்கி டெஸ்க்

இந்தியா , பாகிஸ்தான் ஆசியக்கோப்பை விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வது பற்றியும், பாகிஸ்தான் அணி உலக கோப்பை போட்டிக்காக இந்திய வருவது பற்றியும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து பேசுபொருளாகியது. இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கும் விதமாக ரோஜர் பின்னி இதற்கு மத்திய அரசு முடிவெடுக்கும் என கூறியுள்ளார்.

ரோஜர் பின்னி

மேலும் இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐயின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோஜர் பின்னி, "இந்திய அணி எங்கு செல்ல வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை. இந்திய அணி வேறு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும் அல்லது வேறு நாட்டின் அணிகள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்தியா வந்தாலும் அதற்கு நாங்கள் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இது தொடர்பான முடிவை மத்திய அரசுதான் எடுக்கும். எனவே அந்த முடிவை நாங்கள் மட்டுமே எடுக்க முடியாது" என்று வெளிப்டையாகப் பேசியுள்ளார்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT