விளையாட்டு

தேசிய கீதம் இசைக்கும் போது ‘சூயிங் கம்’ மென்ற விராட் கோலி: கிளம்பியது சர்ச்சை!

கல்கி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தேசிய கீதம் இசைக்கும்போது  சூயிங் கம் மெல்லும் 

காட்சி வெளியாகி, கடும் சர்ச்சையும் கண்டனமும் ஏற்படுத்தி வருகிறது.

.நேற்று (ஜனவரி 230 நடந்த தென்னாப்பிரிக்காவுடனான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது . கேப் டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது .

தென்னாப்ரிக்கா அணியின் டிகாக் சதம் அடித்தார் . அதேபோல் அந்த அணியின் மற்ற வீரர்களும் சிறப்பாக ஆடி 287 ரன்கள் குவித்தனர்.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 283 ரன்கள் எடுத்து வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது .

இந்நிலையில் போட்டி தொடங்குமுன் ஒலிக்கப்படும் இந்திய தேசிய கீதத்தின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேசிய கீதம் இசைக்கும்போது இந்திய அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் தேசிய கீதம் பாடிக் கொண்டிருக்க முன்னாள் கேப்டன் விராட் கோலி மட்டும் சூயிங் கம் மெல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி, விராட் கோலிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Do you know about Kepler 452B?

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பத்திரிகை!

தண்ணீர் பாட்டில் என்றாலே பிளாஸ்டிக் மட்டுமேதானா? மாற்றுவகைகள் உண்டா?

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

SCROLL FOR NEXT