ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பகிர்ந்த பதிவால், டென்ஷனான ஹர்பஜன் சிங் ரீ-ட்வீட் செய்து அளித்துள்ள பதில், தற்போது 9 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் நிலையில், ரசிகர்கள் அவரது ரீ-ட்வீட்டையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பொதுவாக கேப்டன்சி பொறுப்பில் அணியை சரியாக வழிநடத்தக்கூடியவர் என்று எல்லோராலும் பாராட்டப்படக்கூடியவர் தோனி. காரணம், விராட் கோலி தலைமையிலும் சரி, ரோகித் சர்மா தலைமையிலும் சரி இந்திய அணி பல சொதப்பல்களை சந்தித்து வருகிறது.
ஆனால் தோனி தலைமையில்தான் இந்திய அணி பல ஐசிசி கோப்பைகளையும் வென்று குவித்துள்ளது. இதனால் அவரது கேப்டன்சிதான் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ரசிகர் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில், 'பயிற்சியாளர், வழிகாட்டி, மூத்த வீரர்கள் என்றில்லாமல், கேப்டனுக்கான அனுபவமும் இல்லாமல், கேப்டனான 48 நாட்களில், அரையிறுதியில், ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் தோனி' என்று அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இப்பதிவைக் கண்டு கடுப்பான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், 'ஆமாம். அந்த போட்டிகளில் அந்த இளம் வீரர் மட்டுமே தனியாக இந்தியாவிலிருந்து விளையாடினார். மற்ற 10 வீரர்களும் விளையாடவில்லை. அவர் மட்டுமே தனியாக அந்த உலகக் கோப்பையை வென்றார். இதில் விசேஷம் என்னவென்றால், ஆஸ்திரேலியா அல்லது மற்ற நாடுகள் உலகக் கோப்பையை வென்றால் அது ஆஸ்திரேலியா வென்றது அல்லது மற்ற நாடுகள் வென்றது என்று தலைப்புகள் வெளியாகும். ஆனால் இதுவே இந்தியா ஜெயித்தால், இதை இந்த கேப்டன் வென்றார் என்று வரும். இது ஒரு குழு விளையாட்டு. சேர்ந்து எப்படி ஜெயிப்பார்களோ, அப்படியே சேர்ந்து தோற்பார்கள்.' என்று தனது கருத்தை ரீட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், இவரது ரீட்வீட்டைக் கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறார்.
மேலும், கிரிக்கெட் என்பது குழு விளையாட்டுதான். அனைவரும் சேர்ந்துதான் விளையாடுவார்கள். ஜெயிப்பார்கள். இருந்தாலும், அந்த குழுவை வழிநடத்துவது ஒரு கேப்டன்தான். அவர்களிடமிருந்து திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களை சிறப்பாக செயல்பட வைப்பதுதான் சிறந்த கேப்டன்சி. அதை தனது 41 வயதிலும் சிறப்பாக செய்து வெளிக்கொண்டு வந்ததே அதற்கு சான்று என்றும் ரசிகர்கள் பதிலளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.