அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை வீழ்த்தி நட்சத்திர வீரர் ஜோகோவிச் பட்டம் வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடந்தது. நியூயார்க்கில் நடைபெறும் இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் தொடக்கம் முதலே ஜோகோவிச்சின் ஆதிக்கம் காணப்பட்டது. முதல் செட்டை 6க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், டெனில் மெத்வதேவை வீழ்த்தி அடுத்தடுத்த செட்களை 7-6, 6-3 என்ற கணக்கில் வென்று அசத்தினார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை ஜோகோவிச் வெல்வது இது 4ஆவது முறையாகும்.
மேலும் இது ஜோகோவிச் பெறும் 24 ஆவது கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகும். வெற்றி பெற்ற ஜோகோவிச்சுக்கு 25 கோடி ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.
2008-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய இவர் ஆஸ்திரேலியா ஓபன் பட்டம் 10, விமிள்டன் ஓபன் பட்டம் 7, அமெரிக்க ஓபன் பட்டம் 4 பிரெஞ்சு ஓபன் பட்டம் 3 என ஆக மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். 36 வயதாகும் ஜோகோவிச், இதுவரை அதிக கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.