விளையாட்டு

நலம் தரும் நாவல் பழம் நன்மைகள்!

ஆர்.பிரசன்னா

நாவல் பழத்தில் ப்ரோடீன், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.

இதய நோய்கள் வராமல் தடுப்பதில் நாவல் பழத்திற்கு முக்கிய இடமுண்டு. ஞாபக சக்தியையும் அதிகரிக்கின்றது.

ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் நாவல் பழம் உதவுகிறது.

நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டால் சிறுநீர்ப்போக்குக் குறையும்.

வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நாவல் பழத்தில் அதிகளவு நார் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு நாவல் பழம் நல்ல தீர்வாக இருக்கும்.

நாவல் பழத்தில் இனிப்பின் அளவு மிக குறைவாக இருக்கிறது. இதனால் நீரழிவு நோய் உள்ளவர்களும் எந்த விட பிரச்சனையும் இல்லாமல் சாப்பிடலாம்.

நாவல் பழ விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக கற்களானது கரைந்துவிடும்.

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

SCROLL FOR NEXT