விளையாட்டு

14, 15 வயதில் எயிட்ஸ் நோய் பரிசோதனை செய்தேன் - ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஷிகர் தவான்!

கார்த்திகா வாசுதேவன்

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் ஆட உள்ளார். இந்நிலையில் அவர் கூறிய தகவலொன்று தற்போது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அவர் பகிர்ந்து கொண்ட தகவலின் ஆரம்பம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்த போதும் முடிவென்னவோ சமாதானமானதாகத்தான் இருந்தது.

ஷிகர் தவான், தன்னுடைய 14-15 வயதில் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

இந்த பதிலைக் கேட்பவர்களின் கற்பனை சும்மா இருக்குமா? அது பாட்டிலும் கண்டதையும் கற்பனை செய்து கொண்டு ஷிகர் தவானைப் பற்றி என்னென்னவோ நினைக்கத் தொடங்கி இருக்கக்கூடும்.

ஆனால், அவர் பரிசோதனை எடுத்துக் கொண்டது ஒரு சந்தேகத்தை உறுதி செய்து கொள்வதற்காகத்தானே தவிர வேறு பொல்லாத காரணங்கள் எதுவும் அதில் இல்லை என்பதை அவரே பின்னர் உறுதிப்படுத்தி இருந்தார்.

தனக்கு 14, 15 வயதிருக்கும் போது குடும்பத்தினருக்குத் தெரியாமல் மணாலிக்குச் சென்று முதுகில் பச்சை குத்தியிருந்தேன். அதை சிறிது காலம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன்.ஆனால், 4 மாதங்களுக்கு பின்னர் என் தந்தைக்கு எப்படியோ நான் பச்சை குத்தியது தெரிந்துவிட்டது. அவர் என்னை அடித்தார்.

அடி வாங்கியதோடு அல்லாமல், டாட்டூ குத்திக் கொண்ட பிறகு நானும் கொஞ்சம் பயந்து தான் போயிருந்தேன். அங்கு டாட்டு குத்தும் இடத்தில் ஒரே ஊசியை வைத்து எத்தனை பேருக்கு டாட்டு குத்தினார்களோ என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. அதன் மூலமாக ஏதாவது நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ என்று நான் பயந்தேன். அதனால் தான் நான் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டேன். அது இன்று வரை நெகட்டிவ் கமெண்ட்டாகவே இருந்து வருகிறது.

அப்படி பயந்து பயந்து நான் முதலில் குத்திக் கொண்ட டாட்டு ஒரு தேள். அப்போது என் மனதில் அது தான் பிரதானமாக இருந்தது. பிறகு நான் என் கையில் சிவபெருமான் மற்றும் அர்ஜூனரையும் பச்சை குத்திக் கொண்டேன். அர்ஜூனர் வில் வித்தையில் சிறந்தவர் எனபதால் அவரும் என் டாட்டு லிஸ்டில் வந்து விட்டார். - என்று ஷிகர் தவான் கூறி இருந்தது குறிப்பிடத் தக்கது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT